நடிக்க தேவையில்லை - நயன்தாராவுக்கு ஆதரவு குரல் நீட்டிய இயக்குனர் பாண்டிராஜ்
வாலு பிரச்சனை ஒரு வழியாக முடிந்து தற்போது தொடங்கியிருக்கும் புது பிரச்சனை இது நம்ம ஆளு. இன்று சிம்புவின் அப்பா டி.ஆர் நடிகர் சங்கத்தில் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடிக்க மறுக்கிறார் என்று புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். அதாவது எனக்கு தெரிந்து நயன்தாரா தன்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் விட்டுகொடுத்து தான் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு படம் வெளிவந்தால் போதும் என்று கதை மேல் நம்பிக்கையாக இருக்கிறார்.
மேலும் அவர்கள் சொல்லும் பாடல் காட்சி படத்தில் தேவையற்றது. படத்தின் விளம்பரத்துக்காக வல்லவன் படத்தில் வரும் அம்மாடி ஆத்தாடி பாடல் போல் ஒரு பாடலுக்கு சிம்பு, நயன்தாரா, குறளரசன் மற்றும் டி.ஆர் ஆட வேண்டும் என்பது அவர்களின் ஆசை, அதனால் தான் இந்த பாடலில் நடித்து தரும்படி கூறுகின்றனர் என்றார்
No comments:
Post a Comment