Tuesday, September 1, 2015

வாலுவை தொடர்ந்து மற்றொரு படத்திற்கும் கைகொடுத்த விஜய்






இளைய தளபதி விஜய் செய்த உதவியால் தான் வாலு படம் திரைக்கு வந்தது. இதை தொடர்ந்து விஜய் மற்றொரு படத்தின் ரிலிஸிற்கும் உதவி செய்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கவுண்டமணி நடிப்பில் செப்டம்பர் 17ம் தேதி வெளிவரவுள்ள படம் 49-ஒ. இப்படம் பல சிக்கல்களில் இருந்தது.
இதை அறிந்த விஜய் தானே முன் வந்து இப்படத்தின் ரிலிஸிற்கு உதவியுள்ளாராம். மேலும், விஜய், கவுண்டமணி அவர்களின் காமெடிக்கு தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிக்க தேவையில்லை - நயன்தாராவுக்கு ஆதரவு குரல் நீட்டிய இயக்குனர் பாண்டிராஜ்



நடிக்க தேவையில்லை - நயன்தாராவுக்கு ஆதரவு குரல் நீட்டிய இயக்குனர் பாண்டிராஜ் - Cineulagam

வாலு பிரச்சனை ஒரு வழியாக முடிந்து தற்போது தொடங்கியிருக்கும் புது பிரச்சனை இது நம்ம ஆளு. இன்று சிம்புவின் அப்பா டி.ஆர் நடிகர் சங்கத்தில் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடிக்க மறுக்கிறார் என்று புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் நயன்தாராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். அதாவது எனக்கு தெரிந்து நயன்தாரா தன்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் விட்டுகொடுத்து தான் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு படம் வெளிவந்தால் போதும் என்று கதை மேல் நம்பிக்கையாக இருக்கிறார்.
மேலும் அவர்கள் சொல்லும் பாடல் காட்சி படத்தில் தேவையற்றது. படத்தின் விளம்பரத்துக்காக வல்லவன் படத்தில் வரும் அம்மாடி ஆத்தாடி பாடல் போல் ஒரு பாடலுக்கு சிம்பு, நயன்தாரா, குறளரசன் மற்றும் டி.ஆர் ஆட வேண்டும் என்பது அவர்களின் ஆசை, அதனால் தான் இந்த பாடலில் நடித்து தரும்படி கூறுகின்றனர் என்றார்

'கபாலி' ஏன் மலேசியா போகவில்லை தெரியுமா?


 மலேசியாவில் வரும் 17-ம் தேதி தொடங்குவகாக இருந்த ரஜினியின் கபாலி, இப்போது சென்னையிலேயே ஆரம்பமாகிறது. கடந்த மூன்று மாதங்களாக மலேசியா மலேசியா என்று கூறி வந்தவர்கள், திடீரென சென்னையிலேயே படப்பிடிப்பைத் தொடங்குவது ஏன்?

 Why Kabali not going to Malaysia?

இந்தக் கேள்வியை ரசிகர்களும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. நாம் விசாரித்த வரையில்... இதற்கு இரண்டு காரணங்களை பிரதானமாகச் சொல்கிறார்கள். ஒன்று மலேசியாவில் உள்ள அரசியல் சூழல். அங்கு அரசியல் நிலையற்ற தன்மை உள்ளதாலும், அடிக்கடி போராட்டங்கள் வெடிப்பதாலும், உடனடியாக அங்கு படப்பிடிப்பை வைத்துக் கொள்வது உசிதமில்லை என்று படக்குழு முடிவு செய்ததாம். இரண்டாவது, ரஜினியின் ஏவிஎம் பிள்ளையார் கோயில் சென்டிமென்ட். கடந்த பல ஆண்டுகளாக ரஜினியின் வெற்றிப் படங்களின் முதல் நாள் முதல் காட்சி ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ரஜினி தேங்காய் உடைப்பது போலத்தான் தொடங்கும். இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு காட்சி எடுக்கப்படும் என்கிறார்கள். எது உண்மை என்பதை இயக்குநர் ரஞ்சித் வழக்கம் போல ட்விட்டரில் தெளிவுபடுத்தக் கூடும்!

 

கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக நான்தான் புகார் தரணும்! - நயன்தாரா


என் கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக டி ராஜேந்தர் மேல நான்தான் புகார் தந்திருக்கணும் என்று நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார். சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து, இரண்டு பாடல் காட்சிகள் எடுக்கப்படாததால் வெளியாகாமல் நிற்கிறது

T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் பாடல் காட்சிகளில் நடிக்க நாயகி நயன்தாரா மறுப்பதாகவும், மீதிப் பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகவும் தயாரிப்பாளர் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார்

 T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் புகாருக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார். அதில், "நான் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக பல முறை தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒருமுறை கூட அவற்றை சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது நான் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் நடிக்க முடியவில்லை. நியாயமாக என் கால்ஷீட்டை வீணடித்ததற்காக நான்தான் புகார் தந்திருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



அனிருத்துக்கு கிடைத்த அஜித்தின் பாராட்டு





1426251570-7991





ஆளையே அடிக்கடி பார்க்க முடியாது. இதில் பாராட்டு என்பதெல்லாம் குறிஞ்சிப்பூதான். அஜித்தை பற்றிதான் சொல்கிறோம்.
விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்யாணம், காது குத்து, இறுதிச்சடங்கு என்று எதிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. அப்படிப்பட்ட தனி உலகத்திலிருந்து பாராட்டு கிடைக்கிறது என்றால், அது விசேஷம்தானே.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்துக்காக அவர் சில படங்களை தவிர்க்க வேண்டி வந்தது. படம் இறுதிகட்டத்தை நெருங்கும் நேரம், அனைத்துப் பாடல்களையும் முடித்துவிட்டார் அனிருத்.
இந்தப் பாடல்களை கேட்ட அஜித் உற்சாகமாகி அனிருத்தை பாராட்டியிருக்கிறார். பார்க்கவே முடியாதவரிடமிருந்து கிடைத்த பாராட்டு இல்லையா? பரவசமாக இருக்கிறார் இந்த இளம் இசையமைப்பாளர்.